Sunday, 2 October 2022

Lalitha Panchami! || லலிதா பஞ்சமி!


ஓம் அகத்தீசாய நம!

 பாரதம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாட படும் பண்டிகை தான் நவராத்திரி. ஒவ்வொரு வருடமும் வருகின்ற இவ் ஒன்பது (9) நாட்களும் என் வாழ்வில் மிக முக்கியமான நாட்களாக நான் கருதுகிறேன். சென்ற வருடம் 2021ஆம் ஆண்டில் மிக சிறப்பாகவும், பயபக்தியுடனும் இவ் ஒன்பது நாட்கள் லலிதா தேவியை வணங்கி அவருடைய ஆசிகளை பெற்றடைந்தேன். அம்மன் வழிப்பாட்டில் மிக முக்கியமாக கருதப்படும் 'லலிதா சஹஸ்ரநாமத்தை" 9 நாட்களில் 108 முறை பாராயணம் செய்து முடித்தேன். இவ்வருடம் சிறிது முன்னேற்றம் அடைந்து, 'லலிதா ஸஹஸ்ரநாமம்' ஹோமத்தை மன நிறைவுடன் செய்தேன்! லலிதா சஹஸ்ரநாமத்தை ஓதுவதே சிறிது கடினம் என்று கூறுவர். இதில் ஹோமம் என்றால், நம் முழு பிராணத்தையும் அதில் செலுத்த வேண்டும். ஏனெனில், "சிதக்னிகுண்ட ஸம்பூதா தேவ கார்ய ஸமுத்யதா" என்று சஹஸ்ரநாமத்தில் 2ண்டாவது வரி கூறுகிறது. இதற்கு "தேவர்களுக்கு உதவி செய்ய அக்னி குண்டத்தில் இருந்து எழுந்தவளே!" என்று பொருளாகும். அக்னி குண்டத்தில் இருந்து உதித்தவளுக்கு ஹோமம் வளர்த்தால் அது எவ்வளவு பெரிய பாக்கியம்!


இவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமத்தை, ஓர் சாதாரண மனிதன் செய்யவது கடினம். ஒன்று வேதங்கள் கற்றிருக்க வேண்டும், இல்லை என்றால் யாரவது இவ் ஹோமம் செய்வதை பார்த்திருக்க வேண்டும். மேற்சொன்ன இரண்டுமே இல்லாமல், வெறும் அகத்திய மாமுனிவர் மற்றும் லலிதா தேவியின் ஆசிகளுடன் லலிதா பஞ்சமி (நவராத்திரி 5ஆம் நாள்) அன்று இவ் ஹோமத்தை அதி சிறப்பாக செய்து முடித்தேன்.




இந்த தகவலை இங்கு எதற்கு நான் அனைவரிடமும் பகிர்ந்துள்ளேன் என்கிற கேள்வி எல்லோர் மனத்திலும் வந்து செல்லும். இவ் ஹோமத்தின் நோக்கம் சுயநலம் அல்ல. எனக்காகவோ  அல்லது என் குடும்பத்தினருக்காகவோ இவ் ஹோமத்தை நான் செய்ய வில்லை. இவ் ஹோமத்தை நான் செய்தது பொது நலத்திற்காக மட்டுமே! உலக மக்களின் நன்மைக்காக சித்தர்களும் தெய்வங்களும் எவ்வளவு பாடு படுகிறார்கள்! அவர்களை நாம் துதித்து போற்றினால் மட்டும்  போதாது, இவ்வாறு அவர்களுக்கு உதவும் விதமாக அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், உலக மக்களுக்கு எவ்வித ஆபத்தும் வராமல் நோயற்று வாழ வேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த மனப்பான்மையுடன் இருந்தால், சித்தர்கள் உங்களை தேடி வந்து ஆட்கொள்வார்கள்!

ஆகையால், அனைவரும் சுயநலத்திற்காக இறைவனை வணங்காமல் பொது நலத்திற்காக வணங்கி பாருங்கள். நிச்சயம் தங்களது வாழ்க்கை மேலோங்கும்! திருப்தியாகவும் இருக்கும்!

அனைவருக்கும் இனிய நவராத்திரி 7ஆம் நாள் வாழ்த்துக்கள்!

காலராத்திரி தேவியின் அருள் அனைவருக்கும் கிட்ட வேண்டுகிறேன்!

நன்றி!


ஓம் அகத்தீசாய நம!

ஓம் லலிதாம்பிகையே நம!

அல்ஹம்துலில்லா!

வாஹே குரு!

அல்லேலூயா!

எப்பொழுதும் இறைவனுக்கான சேவையில்,
- அக்ஷிதா.