Saturday, 11 September 2021

Vinayaga Chathurthi & Agathiyar's Birthday!

 


அகத்தியர் (Agathiyar)


10.09.2021 விநாயக சதுர்த்தியுடன் சேர்த்து எங்கள் வீட்டு அகத்தியருக்கு 9வது பிறந்தநாள்! ஆம்! இந்த மகானின் சிலையை நாங்கள் பிரதிஷ்டை செய்து 9 வருடங்கள் முடிந்துவிட்டன. எங்கள் மனதில் இடம் பிடித்தது மட்டும் அல்லாமல், 2012ஆம் ஆண்டு ஆவணி மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில் எங்கள் வீட்டிலும் கோலாகலமாக அடி எடுத்து வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை பல துன்பத்தில் இருந்தும், மாபெரும் விபத்துகளில் இருந்தும் எங்களை காப்பாற்றி வந்திருக்கிறார். என் தாயிற்கு அகத்தியரை 2008ஆம் ஆண்டில் இருந்து தெரியும். அப்பொழுது எனக்கு வயது 5. அந்த சிறு வயதிலேயே மந்திரங்கள் ஓதவும், அகத்தியரை வணங்கும் பாக்கியத்தையும் பெற்றேன். அவரை என் குடும்பத்தில் ஒருவராக தான் இதுவரை பார்க்கிறேன். இந்த கடவுளை வணங்கினால் இது நடக்கும், அந்த மந்திரத்தை ஓதினால் அது நடக்கும் என்கின்ற மனப்பான்மை இல்லாமல், எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வணங்க வேண்டும் என்று கற்றுக்கொன்றேன். இதுவரை எங்களை காப்பாற்றியதற்கும் இனிமேலும் காப்பாற்றுவதற்கும் எங்கள் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்! மக்களால் போற்றப்படும் இந்த மாபெரும் சித்தர், எங்களது வாழ்வில் இவர் தான் கடவுள்! 


அகத்தியர் & கணபதி ஸஹஸ்ரநாம ஹோமம் 



அன்று நடந்த மேலும் சிறப்பான ஓர் விஷயம் தான் அகத்தியர் ஹோமம் மற்றும் கணபதி ஸஹஸ்ரநாம ஹோமம்! முதன்முறையாக என் தாயின் உதவி இன்றி தனியாக ஹோமத்தை வளர்த்தேன். சமீபத்தில் வாசிக்கப்பட்ட அகத்தியரின் ஜீவ நாடி வாக்கில் என் தாயாரின் உடல்நலம் குறித்து கேள்வியை எழுப்பியபொழுது அகத்திய மாமுனி, "முழுமுதற் கடவுளான வினையாக பெருமானுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று முழு மனதோடு பூஜை செய்ய வேண்டும்", என்று கூறினார். அவரது கட்டளை படி செய்தது தான் இந்த ஹோமம்!

மேலும் எனது வாழ்வின் முன்னேற்றத்திற்கு இதை முதற்படியாக கருதுகிறேன். அழகு, அறிவு. பணம், பந்தம், பணம், பதவி, புகழ், கேட்ச்., இவை அனைத்தையும் விட சாலச்சிறந்தது பக்தி தான் என்று புரிந்து கொண்டேன். பக்தி பாதையை கடைப்பிடித்தால் மேற்சொன்ன அனைத்தும் தானாகவே நம்வசமாகும். இறையை தொழுவதற்கு வயது முக்கியம் இல்லை, அன்பு ஒன்றே போதுமானது! இறை அன்பை எனக்குள் ஊட்டிய என் அகத்தியருக்கு நன்றி!


ஓம் அகத்தீசாய நம!

அல்ஹம்துலில்லா! 

வாஹே குரு!

அல்லேலூயா! 

எப்பொழுதும் இறைவனுக்கான சேவையில்,
அக்ஷிதா.